Posts

Showing posts from February, 2011

கிறுக்கனின் கிறுக்கல்கள் - February Special

எதோ விளம்பரத்தில் கேட்டேன் "இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று... பயங்கர கோபம் வந்துவிட்டது எனக்கு, இவர்கள் யார் என்னவளிடம் வாழ்த்து கூற ? 
பெண்ணின் திருமண வயது 21 என்று எழுதியிருந்தார்கள் ஆட்டோவில், ஆனால்  அது பெண்ணின் உடலுக்கா உள்ளத்துக்கா என்ற கூறவில்லையே... என்னவள் உடல் வளத்தில் பங்குச்சந்தை போலத்தான், ஆனால் உள்ளத்தில் என்னை வேண்டி அடம் பிடிக்கும் சிறுபிள்ளை ஆயிற்றே !!!
தன் காதலை சொல்ல Application எழுதிய அம்பியை பார்த்து சிரித்தவன் நான்... இன்று காதலியை காண அவள் அப்பாவிடம் Loan Application போடும் வரை... என்னை கண்டும் காணாமல் போனாயே என்று கோபப்படுகிறான் நண்பன், என் கண்களால் என்னவளின் சுவாசத்தை வாசித்துக் கொண்டிருந்ததை சொன்னால் புரிந்து கொள்ளவா போகிறான்?
வேறு ஆண் அவளுடன் பேசுவதை நான் தடுத்தால் பொறாமை என்கிறாள், "இருக்கும் சிறு மூலையிலும் தன் நினைவால் செயல் இழக்க செய்யும் உன்னிடமிருந்து  அவர்களை காக்க நினைக்கும் ரட்சகன் நான்", என்று அவளிடம் எப்படி கூறுவது  ?

ஒரு நாள் என்னை பார்க்கவில்லை என்றால் உயிரே போய் விடும் என்றால் அவள், உயிரை தினமும் சந்திக்கும் பழக்கம் எனக்கு இ…

கிறுக்கனின் கிறுக்கல்கள் - மழை

நெருப்பும் நீரும் எதிர் எதிர் என்று யார் சொன்னார்கள்?  என்னவள் நனைந்தால் எந்தன் இதயம் அனலாய் கொதிக்கின்றதே !!!

கிறுக்கனின் கிறுக்கல்கள் - அழுகையின் சிறப்பு

அழுகை என்பதை வெறுத்தவன் நான்... என்னை ஒரு நாள் பிரிந்திருக்க முடியாமல் , கைப்பேசியில் நீ சிந்திய உன் கண்ணீர் ஓசை என் காதில் கேட்கும் வரை...

பின்குறிப்பு: கிறுக்கனின் கிறுக்கல்கள் எங்கிருந்தோ தழுவப்பட்டது போல் தோன்றினால் கிறுக்கன் ( நான் உண்மையை ஏற்றுக்கொள்பவன்..:) ) பொறுப்பல்ல. கிறுக்கனின் கிறுக்கல்களில் வரும் கிறுக்கல்கள் யாவும் என் சிறய மூளையில் உதித்ததே ஆகும்.  Inspirations could have been drawn from somewhere else, but its the execution that counts....Isn't it ?

கிறுக்கனின் கிறுக்கல்கள் - நினைவுகள்

உறங்கிக்கொண்டே இருந்தேன் கனவில் நீ வருவாய் என்ற நம்பிக்கையில்...  இன்றும் உறங்கப்போகிறேன்... நிரந்தரமாய், இறந்த பின் நினைவாகவாவது உன் மனதில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கையில்...

கிறுக்கனின் கிறுக்கல்கள் - பிரிவு

என்னவளின் பிரிவை நேற்று தான் உணர்ந்தேன், என் மூச்சை அடக்கிய அந்த சில நொடிகள்...

கிறுக்கனின் கிறுக்கல்கள் - தேவதையின் வருகை

யார் கூறினார்கள் தேவதைகள் வெள்ளை நிறத்தில் தான் வருவார்கள் என்று... நேற்று என்னவள் கருநீல சேலையில் கார்மேகத்தை வெட்கித் தலைகுனிய வைத்தாலே !!!

கிறுக்கனின் கிறுக்கல்கள் - காதல் வாழ்த்து

உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல இயலாமல் மௌனங்களால் சொல்ல நினைத்தேன்,
ஆனால் மௌனங்களும் என்னை ஏமாற்றிவிட்டன.

என் இதயத்தில் நீ இருக்கின்றாய் என் பொய் கூற விரும்பவில்லை,
என் இதயமாய் நீயே தான் இருக்கின்றாய் என்ற உண்மையை நான் கூறி நீ அறிய விருப்பமில்லை.

நீ என்னுடன் இருக்கும் பொழுது நான் பறப்பதை போல இருந்தது உண்மைதான்,
ஆனால் அப்பொழுதும் உன்னை விட்டு பிரியக்கூடாது என்று பறப்பதை நிறுத்த நினைத்ததை கூற வில்லை உன்னிடம்.

சிறு பிள்ளை போல உன்முன் நிற்கும்போது வெட்கப்படவில்லை ,
ஆனால் இன்றும் உன் இதயத்தை கிழித்ததற்காக வெட்கி தலை குனிகிறேன்.

காதலர் தினம் என்பது என்றோ ஓர் நாள் மட்டும் காதலை பெரிதாய் எண்ணுபவர்களுக்கு என்று கூறினேன் நேற்று,
அந்த ஒரு நாளும் உன்னை கதற வைத்தேன் இன்று..:(

மன்னிக்காதே என்னை நீ உயிரே,
தண்டித்துவிடு மீண்டும் மீண்டும் என்னை காதல் செய்து....

பின்குறிப்பு: நேற்று இதை எழுதி, பரிசாக கன்னத்தில் வாங்கியதை எழுத வேண்டாம் என்று விண்ணப்பம் வந்ததால் அதை எழுதவில்லை ..;)