கிறுக்கனின் கிறுக்கல்கள் - காதல் வாழ்த்து

உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்று வார்த்தைகளால் சொல்ல இயலாமல் மௌனங்களால் சொல்ல நினைத்தேன்,
ஆனால் மௌனங்களும் என்னை ஏமாற்றிவிட்டன.

என் இதயத்தில் நீ இருக்கின்றாய் என் பொய் கூற விரும்பவில்லை,
என் இதயமாய் நீயே தான் இருக்கின்றாய் என்ற உண்மையை நான் கூறி நீ அறிய விருப்பமில்லை.

நீ என்னுடன் இருக்கும் பொழுது நான் பறப்பதை போல இருந்தது உண்மைதான்,
ஆனால் அப்பொழுதும் உன்னை விட்டு பிரியக்கூடாது என்று பறப்பதை நிறுத்த நினைத்ததை கூற வில்லை உன்னிடம்.

சிறு பிள்ளை போல உன்முன் நிற்கும்போது வெட்கப்படவில்லை ,
ஆனால் இன்றும் உன் இதயத்தை கிழித்ததற்காக வெட்கி தலை குனிகிறேன்.

காதலர் தினம் என்பது என்றோ ஓர் நாள் மட்டும் காதலை பெரிதாய் எண்ணுபவர்களுக்கு என்று கூறினேன் நேற்று,
அந்த ஒரு நாளும் உன்னை கதற வைத்தேன் இன்று..:(

மன்னிக்காதே என்னை நீ உயிரே,
தண்டித்துவிடு மீண்டும் மீண்டும் என்னை காதல் செய்து....

பின்குறிப்பு: நேற்று இதை எழுதி, பரிசாக கன்னத்தில் வாங்கியதை எழுத வேண்டாம் என்று விண்ணப்பம் வந்ததால் அதை எழுதவில்லை ..;)

Comments

Popular posts from this blog

Changing Timezone in Postgresql, Ubuntu

Display Logic and read only logic In Openbravo

My 10 years in Application Development