கிறுக்கனின் கிறுக்கல்கள் - February Special

எதோ விளம்பரத்தில் கேட்டேன் "இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று...
பயங்கர கோபம் வந்துவிட்டது எனக்கு, இவர்கள் யார் என்னவளிடம் வாழ்த்து கூற ? 

பெண்ணின் திருமண வயது 21 என்று எழுதியிருந்தார்கள் ஆட்டோவில்,
ஆனால்  அது பெண்ணின் உடலுக்கா உள்ளத்துக்கா என்ற கூறவில்லையே...
என்னவள் உடல் வளத்தில் பங்குச்சந்தை போலத்தான்,
ஆனால் உள்ளத்தில் என்னை வேண்டி அடம் பிடிக்கும் சிறுபிள்ளை ஆயிற்றே !!!

தன் காதலை சொல்ல Application எழுதிய அம்பியை பார்த்து சிரித்தவன் நான்...
இன்று காதலியை காண அவள் அப்பாவிடம் Loan Application போடும் வரை...
 
என்னை கண்டும் காணாமல் போனாயே என்று கோபப்படுகிறான் நண்பன்,
என் கண்களால் என்னவளின் சுவாசத்தை வாசித்துக் கொண்டிருந்ததை சொன்னால் புரிந்து கொள்ளவா போகிறான்?

வேறு ஆண் அவளுடன் பேசுவதை நான் தடுத்தால் பொறாமை என்கிறாள்,
"இருக்கும் சிறு மூலையிலும் தன் நினைவால் செயல் இழக்க செய்யும் உன்னிடமிருந்து 
அவர்களை காக்க நினைக்கும் ரட்சகன் நான்", என்று அவளிடம் எப்படி கூறுவது  ?

ஒரு நாள் என்னை பார்க்கவில்லை என்றால் உயிரே போய் விடும் என்றால் அவள்,
உயிரை தினமும் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று சமாளித்து விளையாட்டை ஆரம்பித்தேன் நான்..:)

கோபம் என்ற ஆயுதத்தை வீசித்தான் என் கண்களில் கண்ணீரை நீரை வரவழைத்தோம் என்று பெருமிதம் கொள்ளாதே உயிரே...
அந்த நீர் உன்னக்கு கோபம்  வர காரணமாய் இருந்த வெறுப்பில் வெந்து புதைந்து போன எந்தன் நெஞ்சின் மிச்சங்கள் ஆகும்...

யாருக்காகவோ அழுதால் உயர்ந்த உள்ளம் என்கிறாய்,
உன் உள்ளம் துடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக கல்லாய் இருக்கும் எந்தன் உள்ளதை என்ன சொல்ல?

நான் அழுதால் துடிக்கும் உதடுகள் வேண்டாம்,
துடைக்க கைகள் வேண்டாம்,
வெதும்ப நெஞ்சம் வேண்டாம்,
ஓரப்பார்வையால் ஒரு முறை பார்த்துவிட்டு போ,
அந்த அனலில் அடங்கிவிடும் என் ஆவியும் அந்தமும்...

சுமைகள் சுகமாகும் தருணங்கள் உணர்ந்தேன்,
நேற்று என் தோள்களில் நீ சாய்ந்த பொழுது...
தொடுதல்கள் ரணமாகும் அவஸ்தையை அறிந்தேன்,
கோபத்தில் உன்னை தீண்ட வந்த எந்தன் கைகளை நீ தட்டி சென்ற பொழுது...

என்மேல் சாய்ந்து குழந்தை போல் நீ உறங்கிய பொழுது நினைத்தேன்,
இது தான் நான் வாழ்வதற்கு அர்த்தம் என்று...
இது தான் காதலின் புனிதம் என்று...
இது தான் பெண்ணின் மகிமை என்று...
"உன்னை சகித்துக்கொண்டு தான் வாழ வேண்டும் என்றால்,
அப்படிப்பட்ட வாழ்வே வேண்டாம்" என்று நீ கூறும் வரை....

உன் கோபத்திற்காக நம் காதலை தியாகம் செய்ய நீ துணிந்த அந்த நொடியிலும்,
கோபத்தில் உன் குரல் தழுதழுக்கும் அழகை தானடி ரசிக்கின்றது என் மனம்...

காதலும் தவம் தான்...
உன்  பொறுமையை பொறுத்து அதன் ஆயுள் இருப்பதால்...Comments

Popular posts from this blog

Changing Timezone in Postgresql, Ubuntu

My 10 years in Application Development

Dissecting Openbravo 3.0 UI Architecture