கிறுக்கனின் கிறுக்கல்கள் - March 2011

தண்டனை என்பதன் வலி அறிந்தேன்,
என் தவறுக்காக நீ உன்னை தண்டித்துக்கொண்டு என்னிடம் சிரித்த பொழுது....

தாய் தந்தை கண்டித்தபோது கோபம் வந்தது,
ஆசிரியர் கண்டித்தபோது அடிக்கத் தோன்றியது,
நண்பன் கண்டித்தால் நகைக்கத் தோன்றியது,
அது ஏனடி நீ கண்டித்தால் மட்டும் சாகத் தோன்றுகிறது?

உன் கண்களில் காந்தம் உள்ளதோ இல்லையோ என்னைக்குத் தெரியாது,
ஆனால் என்னை மயக்கும் எதோ ஒரு பாந்தம் உள்ளது என்று மட்டும் தெரியும்....

தோல்வியின் வலியை உணர்த்தியது என்னை மாற்ற முயன்று தோற்ற வினாடியில் உன் கண்ணீர்,
காதலின் மகிமையை உணர்த்தியது அந்த வினாடியிலும் என்னை பார்த்து சிரிக்க முயன்ற உன் உதடுகள்...

இருள் என்றால் எனக்கு பயம் தான் உன் கூந்தலினுள் உறங்கும் முன்...

காதல் என்ற நோயின் அறிகுறிகள்...
கிறுக்கனின் கிறுக்கல்கள் கவிதையாய் தெரிந்தது,
உன் பாடல் முன்பு தாளங்கள் தப்பாக உணர்ந்தது,
வானத்தில் மேகங்கள் உன் வளைவுகள் போல் உருவம் கொண்டது,
உன்னை தவிர எல்லா பெண்களுக்கும் ஏதோ குறை இருப்பது போல் தோன்றுவது,
நீ என்னுடன் இல்லாத பொழுது என் சுவாசம் நின்றுவிட்டது போல் தோன்றுவது...

நீ என்னை காதலிக்க ஆரம்பித்த பின் தான் நான் என்னை நேசிக்க ஆரம்பித்தேன்....  


என் உறவாக தந்தையை காட்டியது என் தாய்,
ஆனால் என்னை எனக்கே புதிதாய் காட்டியவள் நீ...Comments

Popular posts from this blog

Changing Timezone in Postgresql, Ubuntu

My 10 years in Application Development

Dissecting Openbravo 3.0 UI Architecture