இந்தியன் என்பதில் பெருமிதம் கொண்டோம்,
தமிழன் என்பதில் தலைக்கணம் கண்டோம்,
மனிதம் என்பதை நினைக்க மறந்ததால்,
மரம் செடி போல உயிர் இருந்தும் இல்லாமல் வாழ்தோம்....

கோழியை அமுக்க தேவை கோணி,
மளிகை கடைல காலைல தேவ ஒரு நல்ல  போனி,
உலககோப்பையை தூக்கிட்டாண்டா நம்ம பையன் தோணி,
அவன தப்பா பேசினவன் எல்லாம் சப்ப கோணி.

நேற்று மழை பெய்ததை பற்றி எதோ அதிசயம் போல் பேசிக்கொண்டிருந்தார்கள் அலுவலகத்தில்,
பாவம் நிலா நனைந்ததை பார்த்திருக்க மாட்டார்கள்,
என்னவள் என்னுடன் வாகனத்தில் நனைந்து கொண்டே அல்லவா வந்தாள்...

இமைகள் இருப்பதன் பயன் அறிந்தேன் நேற்று உன்னை பிரிந்து சென்ற பொழுது,
இரவெல்லாம் உன் பின்பத்தை காண்பித்து என்னை காபற்றியதே என் இமைகள்...

கண்கள் வேண்டாம் என்று இறைவனை வேண்டினேன், 
இருட்டினுள் உன் மேல் உன்னை தேடிய அந்த இரு நொடிகள்...

காதல் திருமணங்களில் வரதட்சணை எப்பொழுதும் அதிகம் தான்,
பெற்றோர்களின் உயிருக்கு விலை அதிகம் தானே...

நாம் நடும் மரம் செடி கூட அது நினைத்தது போல் வளரும் பொழுது,
நாம் பெற்ற பிள்ளை நாம் நினைத்தது போல் தான் வளர வேண்டும் என்று நினைப்பது சரியா?

உன் காதல் பெரியதா இல்லை என் காதல் பெரியதா என்று சண்டை போட்டாள் என்னவள்,
என்னையெல்லாம் காதலிக்கும் உன் காதல் தான் பெரியது என்று கூறினேன்...
மிகவும் ஆனந்தமாய் என் கன்னங்களை நனைத்தால் என்னவள்,
இப்பொழுது சொல்லுங்கள் வென்றது நானா அவளா ??? ;)

கண்டதும் காதல் மீது நம்பிக்கை இல்லை என்றால் என்னவள்...
இவளின் மேல் பட்டு விட்டு இறந்தாலும் சொர்க்கம் தான் என்று இவளை தொடத் துடிக்கும் கொசுவை தள்ளி விட்டுக்கொண்டே...
பி.கு: அந்த கொசுவே நீ தான் என்று யாரும் கூற வேண்டாம், என்னக்கே தெரியும்,,,

பக்கத்தில் வந்தாலே சீ அதெல்லாம் கல்யாணத்திற்கு பிறகு என்கின்றாள் என்னவள்,
சரி தான், கீழே படும் துப்பட்டா வை எடுத்து விடும் வேலை கல்யாணத்திற்கு பிறகு தானே பார்க்கணும்? 

தெரிவதை விட மறைப்பதற்கு அழகு அதிகம்...நம்பவில்லையா?
என்னவள் துப்பட்டாவை சரி செய்வதை பார்த்திருக்க வாய்ப்பில்லை அல்லவே...அதனால் தான்.....

டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டாளாம் என்னவள்,
என்னுடைய இதயத்தை கிழித்து உள்ளே நுழைந்தது போதாதா?
ஆண்களே எனக்கு சிலை வெய்யுங்கள் உங்கள் இதயங்களை காப்பாற்றியதற்கு....

கடவுளும் உண்டு சாத்தானும் உண்டு என்று உணர்த்துமாம் முதலிரவு...
யாரோ அனுபவிச்சவன் சொன்னது...(I am still waiting)

வெள்ளை வெள்ளையாய் பிகர் வேண்டும் என்று தேடும் மகா ஜனங்களே,
முக்கியமான நேரத்தில் மட்டும் ஏன் விளக்கை அணைத்து விடுகிறீர்கள்?

நான் அழும் போது அவள் அழுதாள்,
நான் சிரித்த போது அவள் சிரித்தாள்,
நான் அணைத்த போது அவளும் அணைத்தாள்,
கொடுத்துவைத்தது அவளின் தலையணை....
பி.கு: மூன்றாவது வரியின் அணைப்பு எதை என்று புரிந்து கொள்ளாதவர்கள், கண்டிப்பாக காதலித்திருக்க வாய்ப்பில்லை...

பேராசைகள் 1 :
குறைவான காலை,
முடியாத இரவு,
மறையாத நிலவு,
மயில் போல நீ,
உன்மேல் துயில்கின்ற நான்....



0

Add a comment

Popular Posts
Popular Posts
Blog Archive
Labels
Total Pageviews
Total Pageviews
148867
Subscribe
Subscribe
Labels
Loading
Dynamic Views theme. Powered by Blogger. Report Abuse.