உன் வாழ்க்கை உன் கையில்

நான் ஒரு பதிவு எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, ஏதாவது எழுதலாம் என்றால்  பல முனைகளிலிருந்து பலத்த எதிர்ப்புகள். ஆகையால் இன்று என்னை மிகவும் பாதித்த ஒரு பாடலை இங்கு பதிவு செய்கிறேன். நீங்கள் வாழ்க்கையை வெறுக்கும் பொழுது, இதை கேட்டால் உற்சாகம் பிறக்கும், நீங்கள் உச்சத்தில் இருக்கும் பொழுது இந்த பாடலை கேட்டால் ஒரு நிதானம் பிறக்கும். இந்த பாடல் "புதுப்பேட்டை" என்ற படத்தில் உள்ள ஒரு பாடல். என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஒரு பாடல். இதோ உங்களுக்காக...

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது,
மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது...
எத்தனைக் கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்,
அத்தனை கண்ட பின்பும், பூமி இன்றும் பூ பூக்கும்...
கருவாசல் விட்டு வந்த நாள் தொட்டு,
ஒரு வாசல் தேடியே விளையாட்டு,
கண் திறந்து பார்த்தால் பல கூத்து,
கண் மூடிக்கொண்டால்...

போர்க்களத்தில் பிறந்துவிட்டோம்,
வந்தவை போனவை வருத்தமில்லை,
காட்டினிலே வாழ்கின்றோம், 
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை,
இருட்டினிலே நீ நடக்கையிலே,
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்...
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே,
உனக்கு துணை என்று விளங்கிவிடும்...
தீயோடு போகும் வரையில்,
தீராது இந்த தனிமை...
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்,
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்...
அந்த தேவ ரகசியம் புரிகிறதே, 
இங்கு எதுவும் நிலையில்லை, கரைகிறதே,
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே...
அந்த கடவுளை கண்டால்...


அது எனக்கு, இது இது உனக்கு,
இதயங்கள் போடும் தனி கணக்கு,
அவள் எனக்கு, இவள் உனக்கு,
உடல்களும் போடும் புதிர் கணக்கு,
உனக்கும் இல்லை, இங்கு எனக்கும் இல்லை,
படைத்தவனே இங்கு எடுத்துச்செல்வான்,
நல்லவன் யார், அட கேட்டவன் யார்,
கடைசியில் அவனே முடிவு செய்வான்.
பழிபோடும் உலகம் இங்கே...
பலியான உயிர்கள் எங்கே...
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்,
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்,
பல முகங்கள் வேண்டும் செரி மாட்டிக்கொள்வோம்,
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
மறுபிறவி வேண்டுமா...

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது,
மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது...
எத்தனைக் கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்,
அத்தனை கண்ட பின்பும், பூமி இன்றும் பூ பூக்கும்...
கருவாசல் விட்டு வந்த நாள் தொட்டு,
ஒரு வாசல் தேடியே விளையாட்டு,
கண் திறந்து பார்த்தால் பல கூத்து,
கண் மூடிக்கொண்டால்...

For english lyrics and the original song, enjoy here...
http://www.youtube.com/watch?v=TFgubeOAhi0
Hope it will be helpful to you in some point of time in your life....

Comments

Popular posts from this blog

Changing Timezone in Postgresql, Ubuntu

Display Logic and read only logic In Openbravo

My 10 years in Application Development