Skip to main content

Posts

Showing posts from June 4, 2011

நாடகப்பள்ளி (The Dance School)

இது வரை கவிதை, corporate என்று காமெடி செய்து கொண்டிருந்த நான் இப்பொழுது உண்மையாகவே ஒரு நகைச்சுவை பதிவு எழுத முயன்றுள்ளேன்...மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்திடவும். இன்று ஒரு நாடகப்பள்ளியில் ஒரு நாள் சென்று வாழ்ந்து பார்போம். 
நம் கதையின் நாயகன், சக்கரத்தாழ்வார், இது அவரின் முழுப்பெயர். சக்கு. இது அவர் பாட்டி அவருக்கு வைத்த பெயர். இவர் தூய சங்கத் தமிழில் தான் பேசுவார்,இவர் பாட்டி தூய சென்னை தமிழில் தான் பேசுவாள். இவரை சக்கு மாமா, சக்கு மாமா என்று கூப்பிட்டு சிரிப்பது தான் அந்த காலினி குழந்தைகளின் பொழுதுபோக்கு, நம்ம சக்கு பார்பதற்கு பாகவதர் போல இருந்தாலும், ஆளு  பயங்கர காமெடி பீஸ். ( நகைச்சவை பொருள்..:) )
காலை 6.30: சக்கு எப்பொழுதும் போல் தலை கீழாக நின்றபடி பூமியை பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் பதற வேண்டாம், காலை எழுந்தவுடன் இப்படி நின்றால், உடலில் உள்ள இரத்தம் முழுவதும் மண்டையை தாக்கி, மூளையை எழுப்புமாம். இது சக்குவின் நம்பிக்கை, ஆனால் அதுக்கெல்லாம்  மொதல்ல மூளை வேண்டும் என்று கலாய்க்கும் பாட்டியை கண்டுகொள்ள மாட்டான் சக்கு. 
சக்கு: என்ன நேரமாச்சு இன்னும் என் சிஷ்யர்கள் யாரும் …